பனிச்சறுக்கு விளையாட்டினால் உயிரிழந்த தொழிலதிபரின் மகன்! உருக்கத்துடன் அப்பா வெளியிட்ட அறிவிப்பு
வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் அகர்வால் பனிச் சறுக்கில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
வேதாந்தா குழுமம்
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வேதாந்தா குழுமம் செயல்பட்டு வருகிறது. அத்துடன் தமிழ்நாட்டிலும் ஸ்டெர்லைட் ஆலையையும் வேதாந்தா நடத்தி வருகிறது.

இதன் தலைவராக அனில் அகர்வால் செயல்பட்டு வருகிறார். இவரது மகன் அக்னிவேஷ் அகர்வால், அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
இதனையடுத்து நியூயார்க் மருத்துவமனையில் அக்னிவேஷ் அகர்வால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
திடீர் மாரடைப்பு
இந்த நிலையில் அக்னிவேஷ் அகர்வால் மருத்துவமனையில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அனில் அகர்வால் தனது மகனின் இறப்பு குறித்து உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
அதில், "இன்று என் வாழ்வின் இருண்ட நாள். என் அன்பு மகன் அக்னிவேஷ், எங்களை விட்டு மிக விரைவாகப் பிரிந்து சென்றுவிட்டார். ஆரோக்கியமாகவும், வாழ்க்கை மீதும் கனவுகள் மீதும் மிகுந்த ஆர்வத்துடனும் இருந்தார்.
நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வந்தார். மோசமான நிலை கடந்துவிட்டது என்று நாங்கள் நம்பினோம். ஆனால், விதி வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு எங்கள் மகனை எங்களிடம் இருந்து பறித்துக் கொண்டது" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், தாங்கள் சம்பாதித்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமானதை சமூகத்திற்குத் திருப்பித் தருவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |