ரூ.25,00,000 பரிசுத் தொகையை கல்லூரிகளுக்கு வழங்கிய தமிழ் விஞ்ஞானி வீரமுத்துவேல்!
சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு தமிழக அரசு வழங்கிய ரூ.25 லட்சம் பரிசுத்தொகையை தாம் பயின்ற கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்துள்ளார்.
தமிழக அரசு பரிசு
தமிழகத்தில் உள்ள சென்னையில், இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திரயான் - 3 திட்டம் வெற்றி அடைந்ததற்கு தமிழ்நாட்டின் விஞ்ஞானிகளுடைய செய்தி கொடிகட்டி பறப்பதாக கூறினார்.
மேலும், சந்திரயான் - 3 திட்டத்தின் இயக்குநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேல் இருப்பது பெருமையளிப்பதாக கூறினார். அதுமட்டுமல்லாமல், 9 விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்ச பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
கல்லூரிகளுக்கு வழங்கிய வீரமுத்துவேல்
இந்நிலையில், தமிழக மாவட்டம், விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேலுக்கு வழங்கிய ரூ.25 லட்சம் பரிசு தொகையை தான் பயின்ற 4 கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்துள்ளார்.
அவர் பயின்ற விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக், தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி, திருச்சி என்.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி. கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகிய கல்லூரிகளுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளார். இதனால், வீரமுத்துவேலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |