நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வீரப்பன் மகள்! எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளார்?
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்னிக்கை நடைபெற்று வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வீரப்பன் மகளின் வாக்கு நிலவரத்தை பார்க்கலாம்.
வீரப்பன் மகள்
மறைந்த வீரப்பனின் மகள் வித்யா ராணி நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார்.
இந்த தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கே.கோபிநாத், அதிமுக சார்பில் ஜெயப்பிரகாஷ், பாஜக சார்பில் சி.நரசிம்மன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில், வீரப்பன் மகள் பாஜகவில் மாநில ஒபிசி அணியின் துணை தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். பின்னர் அங்கிருந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வெற்றி முகமாக உள்ளது.
அந்தவகையில், கிருஷ்னகிரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கே.கோபிநாத் 331245 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அடுத்ததாக, அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயப்பிரகாஷ் 206953 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், பாஜக சார்பில் போட்டியிடும் சி.நரசிம்மன் 143911 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வீரப்பனின் மகள் வித்யா ராணி 71460 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |