180 நாட்களில் ரூ.21 கோடி வருவாய் ஈட்டிய காய்கறி விற்கும் இளைஞர்: அம்பலமான பின்னணி
இந்தியாவின் ஹரியானா மாகாணத்தில் போலியான வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பல ஆயிரம் மக்களை ஏமாற்றி சுமார் ரூ.21 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளார் காய்கறி விற்கும் இளைஞர் ஒருவர்.
மோசடி திட்டத்தை அறிமுகப்படுத்தி
ஹரியானா மாகாணத்தின் ஃபரிதாபாத் பகுதியில் காய்கறி விற்பனை செய்து வந்துள்ளார் 27 வயதான ரிஷப் சர்மா. ஆனால் கொரோனா பெருந்தொற்று இவரது வாழ்வாதாரத்தை மொத்தமாக உலுக்கியுள்ளது.
இதில் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் ரிஷப் சர்மா. இந்த நிலையில் தான், வீட்டில் இருந்தே பணியாற்றும் மோசடி திட்டத்தை அறிமுகப்படுத்தி, கோடிகளை சம்பாதித்துள்ளார்.
பத்திரிகையில் வெளியான தகவலின் அடிப்படையில், வெறும் ஆறே மாதத்தில் சுமார் 21 கோடி அளவுக்கு இவர் சம்பாதித்துள்ளார். ஆனால் வங்கி பரிவர்த்தனைகளால் பொலிசாரிடம் அக்டோபர் 28ம் திகதி சிக்கியுள்ளார்.
இவர் மீது தற்போது 10 இந்திய மாகாணங்களில் 37 மோசடி வழக்குகள் மற்றும் 855 மோசடிகளில் உதவியது உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
மேலும், சீனா மற்றும் சிங்கப்பூர் போன்ற பிற நாடுகளைச் சேர்ந்த குற்றக் குழுக்களுடன் இணைந்து ரகசிய முறைகளைப் பயன்படுத்தி பணத்தை இந்தியாவுக்கு வெளியே அனுப்பியிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
பல லட்சங்கள் முதலீடு
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் காய்கறி விற்பனையில் ஈடுபட முடியாமல் போக, தமது குடும்பத்தை காக்கும் பொருட்டு, குடியிருப்பில் இருந்தே பல வேலைகளை செய்துள்ளார்.
இந்த நிலையில் தான், ஏற்கனவே இணையமூடாக முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள நண்பர் ஒருவரின் அறிமுகம் இவருக்கு கிடைத்துள்ளது. அதன் பின்னரே, இவர் முறைகேடுகளில் ஈடுபட தொடங்கியுள்ளார்.
டெஹ்ராடூனைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரிஷப் சர்மாவிடம் ரூ.20 லட்சத்தை இழந்துள்ளார். பலருக்கும் வேலை வாய்ப்பை வழங்குவதாக கூறி, பல லட்சங்கள் முதலீடு செய்ய தூண்டியுள்ளார்.
ஆனால் மக்கள் நிறைய பணத்தை முதலீடு செய்தவுடன், அவர் காணாமல் போனார், மேலும் அவர்களால் அவரை அணுக முடியவில்லை. மேலும், ரிஷப் சர்மாவின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தொடர்பில் விசாரணை அதிகாரிகளால் இதுவரை கண்டறிய முடியவில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |