காய்கறி உணவு மட்டுமே உண்ணும் கோவில் முதலை: கேரளாவில் ஒரு ஆச்சரிய தகவல்
கேரளாவில் உள்ள கோவில் குளமொன்றில் வாழ்ந்து வந்த காய்கறி உணவு மட்டுமே உண்ணும் முதலை உயிரிழந்தபோது, அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்று அதற்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் தலைப்புச் செய்தியானது.
காய்கறி உணவு மட்டுமே உண்ணும் கோவில் முதலை
கேரளாவில் உள்ள அனந்தபத்மநாபசுவாமி கோவில் குளத்தில் Babia என்று பெயரிடப்பட்ட முதலை ஒன்று வாழ்ந்துவந்தது. அந்த முதலை, கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தை மட்டுமே, அதாவது, காய்கறி உணவை மட்டுமே உண்டு வாழ்ந்ததால், மக்கள் அதை ஆச்சரியத்துடன் பார்வையிட்டுவந்தார்கள்.
இந்நிலையில், கடந்த ஆண்டு, அதாவது, 2022ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9ஆம் திகதி, Babia உயிரிழந்துவிட்டது. பிரம்மாண்டமாக நடந்த அதன் இறுதிச்சடங்கில் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
ஆச்சரிய தகவல்
விடயம் என்னவென்றால், அந்த கோவில் குளத்தில் எப்போதுமே ஒரே ஒரு முதலை இருக்குமாம். பல ஆண்டுகளாக இப்படி ஒரு ஆச்சரிய நிகழ்வு அந்த குளத்தில் நிகழ்ந்துவரும் நிலையில், Babia இறந்தபிறகு, மீண்டும் ஒரு முதலை குளத்தை ஒட்டியுள்ள ஒரு குகையில் இருப்பது இம்மாதம் 8ஆம் திகதி தெரியவந்துள்ளது.
ஆக, Babia இறந்தபிறகு, மீண்டும் ஒரு முதலை குளத்துக்கு வந்துள்ள விடயம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.