விமானத்தில் தவறான உணவால் உயிரிழந்த இலங்கையர் - நீதிக்காக போராடும் மகன்
விமானத்தில் தவறான உணவால் உயிரிழந்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவரின் குடும்பம் நீதிக்காக போராடிவருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 85 வயதான இருதய மருத்துவர் அசோகா ஜெயவீரா, கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கை நோக்கி பயணம் செய்தார்.
கடுமையான சைவ உணவு பழக்கத்துடன் வாழ்ந்த அவர், விமானத்தில் சைவ உணவுக்காக முன்பே ஆர்டர் செய்திருந்தார். ஆனால், விமான ஊழியர்கள் சைவ உணவு இல்லை என கூறி, சாதாரண (அசைவ) உணவையே வழங்கினார்.
அதில் உள்ள இறைச்சியைத் தவிர்த்து மற்ற உணவை சாப்பிட முயன்ற ஜெயவீராவிற்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
விமான ஊழியர்கள் உடனடியாக மருத்துவ உதவிக்காக MidAire சேவையை அணுகினர்.
ஆக்சிஜன் அளவு 69 சதவீதமாக குறைந்த நிலையில், அவருக்கு மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் வழங்கப்பட்டன.
அனால், விமானம் ஆர்க்டிக் வட்டத்தை கடந்துகொண்டிருந்ததால் அவரச தரையிறக்கம் செய்ய முடியவில்லை.
அவரது மகன் சூர்யா ஜெயவீரா, விமானம் மத்திய மேற்கு பகுதியில் இருந்ததால் தரையிறக்க முடிந்திருக்க வேண்டும் எனக் கூறுகிறார்.
விமானம் Edinburgh-வில் தரையிறங்கியபோது, ஜெயவீரா 3 மணிநேரமாகவே மயக்க நிலையில் இருந்தார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், ஆகஸ்ட் 3-ஆம் திகதி உணவுத்துண்டு மூச்சுக்குழாயில் புகுந்ததால் ஏற்பட்ட நுரையீரல் தோற்றால் உயிரிழந்தார்.
இது தொடர்பாக, அவரது மகன் விமான நிறுவனத்திற்கு எதிராக வழக்கை தொடர்ந்துள்ளார். Montreal Convention ஒப்பந்தத்தின் வரம்புகளை மீறி இழப்பீடு கோரியுள்ள அவர், நீதிமன்ற செலவுகள் மற்றும் வக்கீல் கட்டணங்களையும் சேர்த்து நஷ்டஈடு கோருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Qatar Airways passenger death, vegetarian meal flight tragedy, airline negligence lawsuit, Asoka Jayaweera Qatar Airways, choking death on airplane, wrongful death airline case, aviation medical emergency