உகாண்டாவில் யானை மீது மோதிய கார்: 3 அதிகாரிகள் உயிரிழப்புகள்
உகாண்டாவில் யானை மீது வாகனம் மோதிய கோர விபத்தில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
யானை மீது மோதிய கார்
ஞாயிற்றுக்கிழமை உகாண்டா வருவாய் ஆணையத்தின் 7 அதிகாரிகள் பயணித்த கார் ஒன்று முர்சிசன் நீர்வீழ்ச்சி தேசிய பூங்கா அருகே எதிர்பாராத விதமாக யானை ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அருவா நகரில் இருந்து தலைநகர் கம்பாலாவிற்கு அதிகாரிகள் திரும்பி சென்று கொண்டிருந்த போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தை தொடர்ந்து காரில் பயணித்த 3 அதிகாரிகள் உயிரிழந்து விட்டதாக காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் காயமடைந்த 4 பேர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக கம்பாலாவுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த மோதலில் பாதிக்கப்பட்ட யானையின் தற்போதைய நிலை குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தை தொடர்ந்து, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |