லண்டனின் முக்கிய சாலையில் பாதசாரிகள் மீது மோதிய கார்: 20 வயது சம்பவ இடத்திலேயே பலி!
லண்டனின் மையப்பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை துயரமான சம்பவம் ஒன்று பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லண்டனில் சாலை விபத்து
லண்டனில் வேன் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் இருபது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவமானது கிங்ஸ் கல்லூரிக்கு அருகில் உள்ள பாதசாரிகள் பகுதியில் நடந்துள்ளது.
விபத்தின் தாக்கம்
மோதலின் தீவிரத்தால் அந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் இருவருக்கு மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொருவர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
சாரதி கைது
சம்பவ இடத்திலேயே 26 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை பொலிஸார் உடனடியாக கைது செய்தனர்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் மரணம் விளைவித்தது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் ஓட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த விபத்து நிகழ்ந்தவுடன், ஆயுதம் ஏந்திய பொலிஸார், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என அவசர சேவைகள் விரைந்து செயல்பட்டன.
இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்று பொலிஸார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |