சட்டவிரோத செயலில் ஈடுபட்ட அமெரிக்கா: கொந்தளித்த தென் அமெரிக்க நாடு
கரீபியனில் மீன்பிடி படகுகளை அமெரிக்கா கைப்பற்றியதாக வெனிசுலா குற்றம்சாட்டியுள்ளது.
4,000க்கும் மேற்பட்ட கடற்படையினர்
கடலில் போதைப்பொருள் கடத்தல்களை தடுக்கும் முயற்சியில் ட்ரம்ப் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அதன் நடவடிக்கையின் ஒரு பகுதியாக லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் 4,000க்கும் மேற்பட்ட கடற்படையினர் மற்றும் மாலுமிகளை நிறுத்துவதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஆகத்து மாதம் அறிவித்தனர்.
இந்த நிலையில், கரீபியன் கடற்பகுதியில் மீனவர் பயணித்த படகினை சட்டவிரோதமாக அமெரிக்கா தடுத்து வைத்துள்ளதாக வெனிசுலா குற்றம்சாட்டியுள்ளது.
படகில் 8 மணிநேரம்
டுனா மீனவர்கள் 9 பேர் பயணித்ததாகக் கூறப்படும் படகு, வெனிசுலா பிரதேசமான லா பிளான்குவிலா தீவுக்கு வடகிழக்கே 48 கடல் மைல் தொலைவில் பயணித்துள்ளது.
அவர்கள் பிடிக்கப்பட்ட பகுதி நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் வருகிறது என்று வெனிசுலா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் யுவான் கில் கூறுகையில், "18 ஆயுதமேந்திய முகவர்கள் கொண்ட போர்க்கப்பல் படகினை நிறுத்தியது. அவர்கள் சிறிய பாதிப்பில்லாத படகில் 8 மணிநேரம் ஏறி ஆக்கிரமித்தனர்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |