அமெரிக்காவை எதிர்க்க ஒன்று திரளும் வெனிசுலா! நாட்டை பாதுகாக்க குவிக்கப்பட்ட ராணுவம்
அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை எதிர்க்க வெனிசுலாவில் நாடு தழுவிய ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை
ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான வெனிசுலா அரசு போதைப்பொருள் கடத்தல் ஆட்சி நடத்தி வருவதாக குற்றம் சாட்டி வந்த நிலையில், வெனிசுலா நாட்டின் மீது நேற்று அமெரிக்கா திடீர் ராணுவ தாக்குதல் நடத்தியது.
அத்துடன் அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் சிறைப்பிடித்து இருப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் வெனிசுலாவில் ஆட்சி மாற்றம் மற்றும் அதன் எண்ணெய் வளங்கள் மீது அமெரிக்கா நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் வெனிசுலா மற்றும் சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலாவில் ராணுவ நடவடிக்கை தொடக்கம்
இந்நிலையில் வெனிசுலாவின் தன்னாட்சி மற்றும் இறையான்மையை பாதுகாக்கும் நோக்கில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பத்ரினோ(Vladimir Padrino) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் வெனிசுலாவின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் தன்னாட்சியை பாதுகாப்பதற்காக நாடு முழுவதும் ராணுவத்தினர் நிலைநிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் இந்த பாதுகாப்பு முன்னெடுப்பிற்கு ஆபரேஷன் ரெடி காம்பாட் டெப்லாய்மென்ட்(Operation Ready Combat Deployment) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது மக்கள், காவல்துறை மற்றும் ராணுவத்தினர் ஆகிய மூவரின் வலிமையான கூட்டணி மூலம் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பத்ரினோ வலியுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |