வெனிசுலாவை அமெரிக்காவின் 51 வது மாநிலம்: புதிய பரபரப்பை கிளப்பிய டிரம்ப்
வெனிசுலாவை 51-வது மாநிலமாக அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய சர்ச்சை கிளப்பியுள்ளார்.
வெனிசுலாவை அமெரிக்காவுடன் இணைத்த டிரம்ப்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மாதுரோவை அமெரிக்க படைகள் அதிரடியாக கைது செய்து நியூயார்க்கிற்கு நாடு கடத்தினர்.
அத்துடன் வெனிசுலாவின் எண்ணெய் விற்பனையை அமெரிக்கா வழிநடத்தும் என்றும் டிரம்ப் அறிவித்து இருந்தார்.
— The White House (@WhiteHouse) May 12, 2026
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் வெனிசுலாவை 51-வது மாநிலமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த பதிவு வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பதிவில், வெனிசுலா நாட்டின் வரைபடத்தின் மீது அமெரிக்க கொடி போர்த்தப்பட்டு இருப்பதுடன் வெனிசுலா அமெரிக்காவின் 51 வது மாநிலம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Trump’s comms director just shared this photo of Sec. Rubio on Air Force One wearing the same track suit that Maduro was captured in. pic.twitter.com/DLD5YtQFHG
— Kellie Meyer (@KellieMeyerNews) May 12, 2026
சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பதிவை வெள்ளை மாளிகை தங்களுடைய அதிகாரப்பூர்வ X தளத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |