சனாதன தர்மத்தை துஷ்பிரயோகம் செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்! பாஜகவுக்கு வாழ்த்துக்கள் - முன்னாள் கிரிக்கெட் வீரர்
தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற பாஜகவுக்கு வாழ்த்துக்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 4 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க உள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது. அங்கு ரேவந்த் ரெட்டி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
PTI
இந்த நிலையில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியது சர்ச்சையானதை தற்போது குறிப்பிட்டு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், 'சனாதன தர்மத்தை துஷ்பிரயோகம் செய்தால் விளைவுகளை சந்திக்க வேண்டும். மகத்தான வெற்றியைப் பெற்ற பாஜகவுக்கு வாழ்த்துக்கள். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவின் அற்புதமான தலைமைக்கும், கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் சிறப்பான பணிக்கும் மற்றொரு சான்று' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |