ராணுவத்தால் தலையில் சுட்டுக்கொல்லபட்ட பத்திரிக்கையாளர்: சர்வதேச சமுகத்திடம் அல் ஜசீரா நிறுவனம் கோரிக்கை
வெஸ்ட் பேங்க் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய அதிரடிச் சோதனையில், அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் அபு அக்லே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இஸ்ரேலில் வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய அதிரடி சோதனையில், அல் ஜசீரா(Al Jazeera) செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் அபு அக்லே(Abu Akleh,51) தலையில் சுடப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
வெஸ்ட் பேங்க் பகுதியில் நடைப்பெற்ற கத்திகுத்து சம்பவத்தை தொடர்ந்து, பாலஸ்தீனியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜெனின் அகதிகள் முகாமில் (Jenin refugee camp) இஸ்ரேல் ராணுவம் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
இதில் இதுவரை 600 பாலஸ்தீனியர்கள் எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி இஸ்ரேல் ராணுவம் சிறைப்பிடித்து வைத்து இருப்பதாக அங்குள்ள உள்ளூர் குழுக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.
இந்தநிலையில், இன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய அதிரடி சோதனையை செய்தி சேகரிப்பதற்காக சென்ற அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் அபு அக்லே தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
மேலும், பாலஸ்தீன செய்தியாளர் Ali al-Samoudi என்ற ஒருவரும் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து இருப்பதாக தகவல் தெரிவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர் அபு அக்லே சுடப்பட்டு கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் ராணுவம் பொறுப்பேற்க வேண்டும் என சர்வதேச சமுகத்திடம் அல் ஜசீரா செய்தி நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பில் கேட்ஸ் கொரோனா தொற்றால் பாதிப்பு: சுய-தனிமைப்படுத்தலில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்
PM Bennett on the sad death of veteran journalist Shireen Abu Akleh: "According to the information we have gathered, it appears likely that armed Palestinians — who were firing indiscriminately at the time — were responsible for the unfortunate death of the journalist pic.twitter.com/p1mdwG2V8t
— Israel Foreign Ministry (@IsraelMFA) May 11, 2022
இந்த நிகழ்வு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல்( Israel) வெளியுறவுத் துறை அமைச்சகம், செய்தியாளர் அபு அக்லே கொல்லப்பட்டதற்கு வருத்தத்தை தெரிவித்ததுடன், ஆயுதம் ஏந்திய பாலஸ்தீனிய கலவரக்காரர்கள் நடத்திய பேதமற்ற தாக்குதலில் தான் செய்தியாளர் இறந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து இந்த வருத்தமான சம்பவத்தை குறித்த வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்ற இஸ்ரேல் கோரிக்கையை பாலஸ்தீன் மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது.