பிரதமர் மோடி, புடின் சந்திப்பின்போது பாகிஸ்தான் தலைவர் புறக்கணிக்கப்பட்டாரா? வைரலாகும் வீடியோ
சீனாவின் SCO உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புடின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துக் கொண்டபோது பாகிஸ்தான் பிரதமர் தனித்துவிடப்பட்டது போன்ற வீடியோ வைரலாகியுள்ளது.
SCO உச்சி மாநாடு
தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் இந்தியாவின் பிரதமர்நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
#WATCH | Prime Minister Narendra Modi, Chinese President Xi Jinping, Russian President Vladimir Putin, and other Heads of States/Heads of Governments pose for a group photograph at the Shanghai Cooperation Council (SCO) Summit in Tianjin, China.
— ANI (@ANI) September 1, 2025
(Source: DD News) pic.twitter.com/UftzXy6g3K

முடக்கப்பட்ட சொத்துக்களை ரஷ்யாவிடம் ஒப்படைக்க வாய்ப்பில்லை: ஐரோப்பிய ஒன்றியத்தின் கல்லாஸ் திட்டவட்டம்
அவர்களை வரவேற்ற சீன ஜனாதிபதி ஜி ஜின்பின் (Xi jinping) ரஷ்ய தலைவர் புடினுடன் உரையாடலில் ஈடுபட்டார்.
பின்னர் ஒரு முழுமையான அமர்வுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு பிரதமர் மோடியும், ஜனாதிபதி புடினும் ஒருவரையொருவர் வரவேற்று பேசிக்கொண்டு நகர்ந்தனர்.
ஷெபாஸ் ஷெரீப்
அப்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) தனித்து விடப்பட்டதுபோல் தனியாக நின்றிருந்தார்.
இதுதொடர்பான வீடியோ தற்போது அவர் ஓரங்கட்டப்பட்டாரா என்ற கேள்வியுடன் வைரலாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |