வியட்நாமில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு! வெளியான தகவல்
ஆசிய நாடான வியட்நாமில் புதிய கொரோனா மாறுபாடு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்து.
இந்த புதிய வைரஸ் மாறுபாடு இந்தியா மற்றும் பிரித்தானியாவில் முதலில் கண்டறியப்பட்ட மாறுபாட்டின் கலவை என வியட்நாம் குறிப்பிட்டுள்ளது.
புதிதாக கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டதாக வியட்நாம் சுகாதார அமைச்சர் Nguyen Thanh Long கூறினார்.
உலக மரபணு வரைபடத்தில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டை சுகாதார அமைச்சகம் அறிவிக்கும் என்று Nguyen Thanh Long குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியா மற்றும் இந்திய மாறுபாடுகள் பிற மாறுபாடுகளை விட அதிகமாக பரவக்கூடியவை என்று கருதப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸின் இந்த மாறுபாடு கடந்த அக்டோபரில் இந்தியாவில் முதன்முதலில் காணப்பட்டது, பின்னர் வியட்நாம் உட்பட பல நாடுகளுக்கு பரவியது குறிப்பிடத்தக்கது.