ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி விதிப்புகளால், ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் பேரிழப்பை எதிர்கொள்ள இருப்பதாக ஐ.நா. அமைப்பு ஒன்று மதிப்பிட்டுள்ளது.
20 சதவீத வரி
அமெரிக்காவில் இருந்து வெளியான தரவுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கு 136.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்து உலகின் ஆறாவது பெரிய ஏற்றுமதியாளராக வியட்நாம் இருந்தது.
அந்தப் பொருட்கள் பெரும்பாலும் அமெரிக்க மற்றும் வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் அல்லது அவற்றின் சப்ளையர்களால் நடத்தப்படும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆனால், தற்போது அமெரிக்காவிற்கான ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதால், ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். இது 25 பில்லியன் டொலர் அளவிற்கு இழப்பை ஏற்படுத்தும் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 7ம் திகதி ட்ரம்பின் வரி விதிப்பு அமுலுக்கு வந்ததன் பின்னர் வெளியான தரவுகளில், ஏற்றுமதி 2 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. காலணிகள் மட்டும் 5.5 சதவீதம் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது.
மிக மோசமாக
தென்கிழக்கு ஆசியாவில் வேறு எந்த நாடும் வியட்நாம் போன்று மிக மோசமாக பாதிக்கப்படவில்லை என்றே கூறுகின்றனர். அமெரிக்காவிற்கான வியட்நாம் நாட்டின் ஏற்றுமதி 19.2 சதவீதமாக சரிவடையும் என்றே மதிப்பிடுகின்றனர்.
தாய்லாந்தில் இந்த விகிதம் 12.7 சதவீதமாகவும் மலேசியாவில் 10.4 சதவீதமாகவும் இந்தோனேசியாவில் 6.4 சதவீதமாகவும் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க ஏற்றுமதியின் மதிப்பிடப்பட்ட வீழ்ச்சி வியட்நாமின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து தோராயமாக 5 சதவீதம் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தும் என்றே நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |