நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. - தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த விஜய்
தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
விஜய் மக்கள் சந்திப்பு
தவெக தலைவர் விஜய், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மக்களை சந்தித்து பேசினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய தவெக தலைவர் விஜய், " அண்ணா ஆரம்பித்த கட்சியை அதற்கு பிறகு கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் பன்னுகிறார்கள் என நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன?
தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் அவங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அவங்களுக்கு வேணும்னா நம்ம மீது வன்மம் இருக்கலாம். நமக்கு எதுவும் இல்லை.
நம்ம எல்லாரையும் பொய் சொல்லி நம்ப வைத்து ஒட்டு போட வைத்து ஏமாத்தி ஆட்சிக்கு வந்து நல்லது செய்வது மாதிரி நடிக்கிறவர்களை நாம் எப்படி கேள்வி கேட்காம இருக்க முடியும்? இவர்களின் கொள்கையே கொள்ளை அடிப்பது தானே!

நம்ம ஆட்சிக்கு வந்தா.. அது என்ன வந்தா.. வருவோம். மக்களிடம் கண்டிப்பா வரவைப்பாங்க. நம்ம ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கையில் விளக்கமாக கொடுப்போம். நான் அதில் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
தேர்தல் வாக்குறுதிகள்
எல்லாருக்கும் நிரந்தரமான வீடு இருக்கணும்.
ஒவ்வொரு வீட்டிற்கு ஒரு மோட்டர் சைக்கிள் வாகனம் உறுதியாக இருக்கணும்.

காரும் தான் லட்சியம், அதற்கான வசதி வாய்ப்பை உருவாக்குவதற்கு, பொருளாதார வளர்ச்சிக்கு வழியை உருவாக்கணும்.
வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் ஒருவருக்கு நிரந்தர வருமானம் கிடைக்கனும்.
அதற்கான வேலைவாய்ப்பை உருவாக்கணும். அதற்காக பாடத்திட்டத்தில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும்.
அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் பயமின்றி, நம்பிக்கையுடன் செல்லும் வகையில் மாற்ற வேண்டும்.

பருவமழையில், ஊரும், மக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படாமல் இருக்கனும்.
மீனவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு அவர்களுக்கான பாதுகாப்பு, வளர்ச்சி திட்டங்கள் உருவாக்கி அதனை செயல்படுத்த வேண்டும்.
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டம் ஒழுங்கை ஸ்ட்ரிக்ட் ஆக வைத்திருக்க வேண்டும்.
இதை எப்படி செயல்படுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் விளக்கமாக அறிவிப்போம்.
நான் அரசியலுக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்வததற்காக மட்டும் தான். வேறு எந்த நோக்கமும் இல்லை. இந்த விஜய் சும்மா எதையும் சொல்ல மாட்டான். சொன்னால் செய்யாமல் விட மாட்டான்" என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |