சத்யாவை கொன்ற சதீஷை ரயிலில் தள்ளிவிட்டு..கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்: பிரபல தமிழ் நடிகர்
ஐந்து ஆண்டுகளாக காதலித்த நிலையில் தன்னிடம் பேச மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் சத்யாவை ரயிலில் தள்ளிவிட்டதாக சதீஷ் ஒப்புக் கொண்டுள்ளார்
மாணவி சத்யாவை ரயிலில் தள்ளி கொன்ற சதீஷை அதேபோல் தண்டிக்க வேண்டும் என நடிகர் விஜய் ஆண்டனி கேட்டுக் கொண்டுள்ளார்
சென்னையில் இளம்பெண் சத்யாவை கொன்ற இளைஞர் சதீஷை உடனடியாக தண்டிக்க வேண்டும் என நடிகர் விஜய் ஆண்டனி ட்வீட் செய்துள்ளார்.
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை, அவரை காதலித்த சதீஷ் என்ற நபர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சதீஷை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிலையில், சதீஷை உடனடியாக தண்டிக்க வேண்டும் என நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமாக சதீஷை, பொறுமையாக விசாரித்து 10 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிலிடாமல், தயவு செய்து உடனே விசாரித்து ரயிலில் தள்ளிவிட்டு தண்டிக்கும்படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்? pic.twitter.com/b8h5CPb4hg
— vijayantony (@vijayantony) October 14, 2022
நடிகர் விஜய் ஆண்டனியின் இந்த ட்வீட்டிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.