உணவு இடைவேளையில் நடந்த அந்த சம்பவம்.., வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக விஜயபிரபாகரன் வழக்கு
விருதுநகர் மக்களவை தேர்தலில் மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திமுக வெற்றி
விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கவுஷிக் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில், விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அவரது மகன் விஜய பிரபாகரன் முதல் முறையாக தேர்தல் அரசியலில் களமிறக்கப்பட்டார்.
இந்த தொகுதி வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து விஜயபிரபாகரன் முன்னிலை வகித்து வந்தார். அவர் தான் வெற்றி பெறுவார் என்றும் யூகிக்கப்பட்டது.
இறுதியில் 380877 வாக்குகள் பெற்ற விஜயபிரபாகரன் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை பெற்றார்.
புகார்
இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், "விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
உணவு இடைவேளை முடிந்ததும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. அப்போது 13 -வது சுற்று வரை விஜயபிரபாகரன் முன்னிலையில் இருந்தார். அந்த சுற்றில் தான் முறைகேடு நடந்துள்ளது.
அதே சமயம் நள்ளிரவில் வாக்குகள் எண்ணப்பட்டன. விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் தான் அவர் தனது செல்போனை அணைத்து வைத்திருப்பதாக கூறினார்" என்றார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து விஜய பிரபாகரன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த வழக்கு தாக்கல் செய்ய ஒரு மாதத்திற்கு மேல் தாமதம் ஆக எங்கள் தரப்பில் எதுவும் இல்லை. சில நடைமுறைகளை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டியிருந்ததால் தாமதமானது.
உணவு இடைவேளையின் போது 13 -வது சுற்று இருந்தது. பின்னர் உணவு இடைவேளை முடித்த பிறகு 18 -வது சுற்று வாக்கு எண்ணிக்கையை அறிவிக்கிறார்கள்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |