அரசியலுக்கு வர முக்கிய காரணமே இதுதான் - மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று மதுரை அருகே உள்ள பாரபத்தியில் நடைபெற்றது.
இந்த, மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மாலை 4;50 மணிக்கு விஜய் தனது பேச்சை தொடங்கினார்.
விஜய் பேச்சு
இதில் பேசிய அவர், மதுரை என்றாலே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, வைகை ஆறு, மதுரை மீனாட்சி. இந்த மதுரை மண் உணர்வுபூர்வமான மண். இந்த மண்ணில் வாழும் மக்களும் உணர்வு பூர்வமானவர்கள்.
இந்த மண்ணில் கால் வைத்தததும் ஒருவரை பற்றி தான் எனது மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. சினிமா என்றாலும் அரசியல் என்றாலும் நமக்கு பிடித்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.
அவரைப்போலவே குணம் கொண்டவர் எனது அண்ணன் புரட்சி கலைஞர் விஜயகாந்த். அவரும் இந்த மதுரை மண்ணை சேர்ந்தவர் தான். அவரை மறக்க முடியுமா?
அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை
இந்த நேரத்தில் என் மனதில் உள்ளதை சொல்லி ஆக வேண்டும். தூத்துக்குடி ஸ்னோலின் அம்மா என்னை அவர்களின் தம்பி என்றும், அவர்களின் மகளுக்கு தாய் மாமா என்றும் கூறினார்.
நான் அவர்களின் மகளுக்கு மட்டுமல்ல. என்னை அண்ணனாக தம்பியாக நினைக்கும் தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மகள்களுக்கும் எப்போதும் தாய் மாமனாக இருப்பேன். நீங்கள் எல்லாம் என்னுடன் கூட பிறந்த பிறப்பு. என்னை உங்களிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.
அதே போல் நான் ஒன்று சினிமாவில் மார்க்கெட் இழந்து அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனோடு எல்லாவற்றிற்கும் தயாராகி தான் வந்திருக்கிறோம்.
அரசியலுக்கு வர முக்கிய காரணம்
இவ்வளவு தயாராகி நாம் அரசியலுக்கு வர ஒரு முக்கிய காரணம் உள்ளது அது என்ன தெரியுமா? நன்றிக்கடன்! நன்றிக்கடன்! நன்றிக்கடன்!.
30 வருடங்களுக்கு மேலாக நீங்க தான் என்னை தாங்கி பிடிக்கிறிங்க, எனக்கு அன்பும், ஆதரவு கொடுத்து இருக்கிங்க. என்மேல உயிரையே வைத்து இருக்கிங்க. நமது உறவுகளை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது.
இவ்வளவு செஞ்ச மக்களுக்கு நன்றிக்கடன திரும்ப செலுத்த முடியுமானா முடியாது தான். அது எத்தனை ஜென்மம் ஆனாலும் தீர்க்க முடியாது.
இந்த மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் உழைக்குறத விட வேற எந்த எண்ணமும் இல்லை. இனி எனக்கு வேற வேலையும் இல்லை. என் கடன் என் மக்களுக்கு பணி செய்து கிடப்பதே" என பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |