ஐபிஎல்லில் ஓய்வு பெற்று இலங்கையின் கிளப் அணியில் களமிறங்கும் தமிழக வீரர்
தமிழக வீரர் விஜய் ஷங்கர் கண்டி ராயல்ஸ் அணியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் ஷங்கர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த தமிழக வீரர் விஜய் ஷங்கர்.

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் வீரரான இவர், சமீபத்தில் உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரை முன்னிட்டு, விஜய் ஷங்கர் கண்டி ராயல்ஸ் அணியால் தனது 'வெளிநாட்டு நட்சத்திர வீரராக' ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கண்டி ராயல்ஸ்
கண்டி ராயல்ஸ் (Kandy Royals) அணி மேற்கொண்ட முக்கிய ஒப்பந்தங்களில் விஜய் ஷங்கரும் ஒருவர் ஆவார்.
இந்த ஒப்பந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் மொயீன் அலி, இலங்கையின் வனிந்து ஹசரங்கா மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |