ரஞ்சி டெஸ்டில் 143 பந்துகளில் 150 ஓட்டங்கள்! ருத்ரதாண்டவமாடிய தமிழக வீரர் விஜய் ஷங்கர்
அஸ்ஸாம் அணிக்கு எதிரான ரஞ்சி டெஸ்டில் தமிழக வீரர் விஜய் 150 ஓட்டங்கள் விளாசினார்.
ஹனுமா விஹாரி, விஜய் ஷங்கர்
அகர்தலாவில் அஸ்ஸாம் மற்றும் திரிபுரா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டெஸ்ட் நடந்து வருகிறது. 
திரிபுரா அணி முதல் இன்னிங்ஸில் 602 ஓட்டங்கள் குவித்தது. ஹனுமா விஹாரி 156 ஓட்டங்கள் குவித்தார். தமிழக வீரர் விஜய் ஷங்கர் (விஜய் Shankar) ஆட்டமிழக்காமல் 4 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 150 ஓட்டங்கள் விளாசினார்.
சென்டு சர்கார் 94 ஓட்டங்களும், முராசிங் 52 ஓட்டங்களும் எடுத்தனர். ஸ்வப்னில் சிங் 3 விக்கெட்டுகளும், அபிஜித் சர்கார் மற்றும் முராசிங் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய அஸ்ஸாம் 238 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. சிப்சங்கர் ராய் 84 ஓட்டங்கள் எடுத்தார்.
இதனால் 364 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி அஸ்ஸாம் அணி ஆடி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |