தவெக இரண்டாம் ஆண்டு விழாவில் விஜய் பேசியது என்ன?
சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக இரண்டாம் ஆண்டு விழா நிகழ்வு நடைபெற்று முடிந்துள்ளது.
விஜய் பேசியது
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இந்த விழாவானது மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் இருக்கும் போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வந்துள்ளனர்.
இதில் பேசிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், My Friend, My Brother என பேசத் தொடங்கி சிறப்பு விருந்தினரான பிரஷாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் உரையை தொடங்கிய விஜய், "வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக வரலாறு படைக்கும். அரசியலில் மட்டும் தான் நாம் வித்தியாசமான ஒன்றை பார்க்கலாம்.
ஏனெனில், அரசியலில் மட்டும் தான் யார் யாரை எப்போது எதிர்ப்பார்கள் என்று தெரியாது. இங்கு, நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.
மக்களுக்கு மிகவும் பிடித்த ஒருவர் அரசியலுக்கு வந்தால் சிலருக்கு எரிச்சல் வர தானே செய்யும். இதுவரை நாம் கூறிய பொய்யை மக்கள் நம்பினார்களே? இவரை எப்படி க்ளோஸ் செய்யலாம் என்று பார்ப்பார்கள். ந
மது கட்சி வருகின்ற எதிர்ப்பை Left Handல் டீல் செய்து இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நமது கட்சி எளிய மக்களுக்கான கட்சி, பண்ணையார்களுக்கான கட்சி அல்ல.
இந்த கட்சி சாதாரண மக்களுக்கானது. பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதே முதல் வேலை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |