கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள்.., தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க அக்கட்சியினர் முடிவு செய்து உள்ளனர்.
இதன்படி முதலாம் ஆண்டு குரு பூஜை டிச 28ஆம் திகதி நாளை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெறுகிறது.
விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் விழாவில் கலந்து கொள்ள தவெக தலைவர் விஜய்க்கு தேமுதிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |