விஜயகாந்த் உயிருடன் இருந்தபோதே பத்ம பூஷண் விருது கொடுத்திருக்கலாம் - பிரேமலதா
மறைத்த விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பத்ம பூஷண் விருதினை அவர் உயிருடன் இருந்தபோதே வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
பத்ம பூஷண் விருது
இந்திய அரசு சார்பில், கலை, அறிவியல், பண்பாடு, சமூக சேவை என பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இதில், மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இது, அவரது ரசிகர்களும், தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்.
மத்திய அரசுக்கு நன்றி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "விஜயகாந்திற்கு பதம் பூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு இந்திய அரசுக்கு நன்றி. அவர் உயிருடன் இருந்தபோதே வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விருதை தமிழக மக்களுக்கும், தேமுதிக கட்சி தொண்டர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்" என்றார்.
மேலும் பேசிய அவர், "இளையராஜா மகள் பவதாரிணி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இனி அவரது இனிமையான குரலை கேட்க மாட்டோம் என்பது மிகுந்த துயர் அளிக்கிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |