விஜயகாந்த் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த அந்த ஒரு பிரச்சினை
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு ஏற்பட்ட சிறுநீரகப் பிரச்சினை, அவரது அரசியல் வாழ்க்கையை மொத்தமாக முடக்கியதாகவே கூறப்படுகிறது.
தமிழகத்தின் அடுத்த முதல்வராக
2006 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று, அரசியலில் வளர்ந்து வந்த விஜயகாந்த், தமிழகத்தின் அடுத்த முதல்வராக வரவும் வாய்ப்புள்ளதாக மக்களிடையே கருத்தும் நிலவியது.
ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினை காரணமாக மொத்தமும் தலைகீழாக மாறிப்போனது. கடந்த 2014ல் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு சிறுநீரகப் பிரச்சினை இருப்பது தெரியவந்தது.
சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நிரந்தரத் தீர்வாக இருந்த நிலையில், டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். உடல்நலக் குறைவால், அவரது அரசியல் செயல்பாடுகள் படிப்படியாக குறையத் தொடங்கின.
இந்த நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா, சிங்கப்பூருக்கு சென்றார். தொடர்ந்து 2019-ல் விஜயகாந்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
விஜயகாந்தின் செயல்பாடுகள்
இதனையடுத்து கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல், வீட்டிலேயே ஓய்வெடுக்கத் தொடங்கினார். இதனிடையே, 2020 அக்டோபர் மாதம் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
2022 ஜூலை மாதம் அவருக்கு இருந்த நீரிழிவுப் பிரச்சினையால், வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அந்த விரல் அகற்றப்பட்டது.
பின்னர் விஜயகாந்தின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கத் தொடங்கின. அதேநேரத்தில், தேமுதிகவும் பின்னடைவை சந்திக்கத் தொடங்கியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |