ஈழத்தமிழர்கள் அழும்போது என்னால் இயலாது.. பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த விஜயகாந்த்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் ஈழத்தமிழர்களுக்காக தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துள்ளார்.
விஜயகாந்த் மறைவு
கடந்த செவ்வாய்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில், நுரையீரல் அழற்சி காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் இன்று காலை காலமானார்.
விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்காகவும், அரசியல் தலைவர்களுக்காகவும் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு, ரசிகர்கள் தொண்டர்கள் என குவிந்து கண்ணீர் விட்டு அழுகின்றனர்.
இந்நிலையில், விஜயகாந்த் உடல் நாளை மாலை 4.45 மணி அளவில் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
ஈழத்தமிழர்களுக்காக...
நடிகர் விஜயகாந்த் 1965 -ம் ஆண்டுகளில் சிறு வயதில் மதுரையில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல, 1984 -ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக சக நடிகர், நடிகைகளுடன் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார்.
பின்னர், அவர்களின் படுகொலை நிறுத்த வேண்டியும், நீதி கேட்டும் தமிழ்நாடு ஆளுநரிடம் மனு கொடுத்தார். இதனைத்தொடர்ந்து, 1986 -ம் ஆண்டு ஈழத்தமிழர்களுக்காக சென்னை வட்டாச்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் மேற்கொண்டு, தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்தார்.
1989 -ம் ஆண்டுகளில் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தங்கியிருக்கும் அகதிகளுக்கு பல உதவிகளை செய்தார். ஈழத்தமிழர்கள் அழும் நேரத்தில் என்னால் கொண்டாட முடியாது என்று கூறி பிறந்தநாள் கொண்டாட்டங்களை விஜயகாந்த் தவிர்த்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |