விஜயகாந்த் திடீர் மருத்துவமனையில் அனுமதி! மூச்சு திணறலால் அவதிப்பட்டதாக தகவல்
தேமுதிக கட்சியின் தலைவரான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக வலம வந்த விஜயகாந்த், தேமுதிக என்ற கட்சியை துவங்கி அக்கட்சியின் தலைவராக இருந்து வந்தார்.
ஆரம்பத்தில் கட்சி அசுர வளர்ச்சி பெற்ற நிலையில், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது.
அவ்வப்போது விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போவதால், அவர் வீட்டை விட்டு வெளியில் வருவதே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விஜயகாந்த்திற்கு திடீரென்று நள்ளிரவில் மூச்சு திணறல் ஏற்பட்டதால், உடனடியாக சென்னையில் இருக்கும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.