பிரித்தானிய கைதிக்கு மாற்றாக...ரஷ்ய சார்பாளர் மனைவியின் ஒப்பந்தம்: போரிஸ் செய்வாரா?
ரஷ்ய ராணுவத்திடம் பிடிபட்ட பிரித்தானிய பிணைக்கைதி ஐடன் அஸ்லினுடன் ரஷ்ய சார்பு அரசியல்வாதியான விக்டர் மெட்வெட்சுக்கை பரிமாறி கொள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன் உதவவேண்டும் என மெட்வெட்சுக்கின் மனைவி மார்ச்சென்கோ கோரிக்கை முன்வைத்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா தனது போர் தாக்குதலை தொடங்குவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்பாக உக்ரைனில் வசித்து வந்த ரஷ்ய ஆதரவு அரசியல்வாதியான விக்டர் மெட்வெட்சுக்கை அந்த நாட்டு ராணுவம் வீட்டுக்காவலில் அடைத்தது.
இதையடுத்து உக்ரைனில் ரஷ்ய நடத்திய பயங்கரமான தாக்குதலின் போது அவர் வீட்டு காவலில் இருந்து தப்பிக்கவே அவரை கடந்த வியாழன்கிழமை ரஷ்யாவிற்கு தப்பி செல்லும் வழியில் உக்ரைன் ராணுவம் மடக்கி பிடித்து மீண்டும் காவலில் அடைந்துள்ளது.
இதைதொடர்ந்து மரியுபோல் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது உக்ரைன் ராணுவத்திற்காக போரிட பிரித்தானிய இளைஞர் ஐடன் அஸ்லின் ரஷ்ய ராணுவத்திடம் பிடிபட்டு தற்போது பிணைக்கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், உக்ரைனின் ரஷ்ய சார்பு அரசியல்வாதியான விக்டர் மெட்வெட்சுக்கின் மனைவி மார்ச்சென்கோ, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு யூடியுப் வீடியோ வாயிலாக கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கிடம் உங்களின்(போரிஸ் ஜான்சன்) தாக்கம் அதிகமாக இருப்பதால் ரஷ்ய ராணுவத்திடம் பிடிபட்ட பிரித்தானிய வீரருக்கு மாற்றாக உக்ரைன் ராணுவம் பிடித்து வைத்துள்ள எனது கணவர் விக்டர் மெட்வெட்சுக்கை பரிமாறிக்கொள்ள நீங்கள் உதவவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
அதேசமயம் உங்கள் குடிமக்களின் மீது நீங்கள் அலட்சியமாக இல்லாவிட்டால் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் விரைவாக உதவுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக இணையதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மரியா ஜகரோவா பிரித்தானிய பிரதமர் இந்த விவகாரத்தில் தாமதமாக இருக்கமாட்டார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.