VinFast எலக்ட்ரிக் கார் நிறுவனம் தமிழ்நாட்டில் 500 மில்லியன் டொலர் முதலீடு
VinFast நிறுவனம் தமிழ்நாட்டில் 500 மில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ளது.
வியட்நாமைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தியாளர் VinFast, தமிழ்நாட்டில் தனது தொழிற்சாலையை விரிவுபடுத்த 500 மில்லியன் டொலர் (சுமார் ரூ.4,500 கோடி) முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
இதற்காக SIPCOT தொழிற்பேட்டையில் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மின்சார ஸ்கூட்டர் மற்றும் பேருந்துகள்
தற்போது 400 ஏக்கர் பரப்பளவில் இயங்கும் தொழிற்சாலை, வருடத்திற்கு 50,000 மின்சார கார்கள் தயாரிக்கும் திறன் கொண்டுள்ளது. விரிவாக்கத்திற்குப் பிறகு, 1,50,000 வாகனங்கள் தயாரிக்கும் திறன் பெறும்.
புதிய உற்பத்தி வரிசைகள் மூலம் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சார பேருந்துகளும் தயாரிக்கப்படவுள்ளன.

அரசு ஆதரவு
தமிழ்நாடு அரசு, மின்சாரம், தண்ணீர், சாலை, கழிவு மேலாண்மை போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதோடு, தேவையான அனுமதிகள் மற்றும் ஊக்கத்தொகைகளையும் வழங்கும். இதன் மூலம், மாநிலத்தின் பசுமை போக்குவரத்து இலக்குகள் வலுப்பெறும்.
வேலைவாய்ப்பு மற்றும் உள்ளூர்மயமாக்கல்
VinFast Asia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாம் சாங் சோ, “இந்த விரிவாக்கம் இந்தியாவில் எங்கள் தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்துவதோடு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். உள்ளூர் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்தும். தமிழ்நாடு எங்கள் உலகளாவிய விரிவாக்கத்தில் முக்கிய மையமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

விநியோக வலையமைப்பு
தற்போது VinFast 24 டீலர்களை இந்தியாவின் முக்கிய நகரங்களில் இயக்கி வருகிறது. ஆண்டு முடிவதற்குள் இதை 35-ஆக உயர்த்தம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முதலீடு, இந்தியாவின் பசுமை போக்குவரத்து இலக்குகளை முன்னெடுத்து, VinFast நிறுவனத்தை உலகளாவிய மின்சார வாகன சந்தையில் வலுவான போட்டியாளராக மாற்றும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |