திறமை இருந்தும் கெட்ட பழக்கத்தால் சீரழிந்துப்போன கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளி
அனைத்தும் இருந்தும் தவறான பாதையில் வாழ்க்கையில் அனைத்தையும் சீரழித்துக் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளியின் பற்றிய தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
புகழின் உச்சிக்கே சென்ற வினோத் காம்பிளி
எப்படி ராமாயணத்தில் ராமர், லக்ஷ்மன் என்று சொல்வார்களோ, அதேபோல் கிரிக்கெட் உலகில் ராமர், லக்ஷ்மனாக ஜாம்பவான் சச்சினும், வினோத் காம்ப்ளி லக்ஷ்மன் வலம் வந்தனர். இவர்கள் ஒன்றாக இருப்பதை பார்த்து இருவரும் சகோதரர்களா என்று கூட கேட்டவர்கள் பலர்.
அதேபோல் இரண்டு பேரும் ஒன்றாகவே வாழ்க்கையை ஆரம்பித்தனர். இவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து மைதானத்தில் களம் இறங்கினால் போதும், பந்தை சுழட்டி சுழட்டி அடிப்பார்கள். இவர்கள் இருவர் இணைந்து 664 ஓட்டங்கள் எடுத்தது இன்று வரை சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
தவறான பாதையில் சீரழிந்த புகழ்
ஆனால், கிரிக்கெட் உலகில் புகழ் பெற்ற நட்சத்திர நாயகனாக வலம் வந்த வினோத் காம்ப்ளியின் வாழ்க்கை பாதை மாறியது. அவரிடம் இருந்த கோபம், குடிப்பழக்கம், பெண்கள் சகவாசம் அனைத்தும் அவருடைய கிரிக்கெட்டில் கிடைத்த புகழை சீரழித்தது.
கடந்த 1998ம் ஆண்டு ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்த பெண்ணை வினோத் திருமணம் செய்தார். ஆனால், சில ஆண்டுகளிலேயே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று சென்றனர்.
இதன் பிறகு வினோத், ஆண்ட்ரியா என்ற மாடல் அழகியை காதலித்தார். அப்பெண் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் வினோத் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்.
தற்போது வரை இருவரும் நல்ல முறையில் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். 2010ம் ஆண்டு இத்தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தான். வினோத் மட்டும் கிரிக்கெட்டில் நல்லமுறையில் கவனம் செலுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தால், சச்சின், டிராவிட், கங்குலி போன்ற ஜாம்பவான்கள் மத்தியில் அவர் பெயரும் நிலைத்திருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |