பயங்கரமாக பரவும் வைரஸ் தொற்று: 57 நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
அறிவியல் ரீதியாக எவ்வளவுதான் முன்னேற்றம் அடைந்தாலும், உலகம் இன்னமும் நோய்களிலிருந்து முழுமையாக விடுபடவில்லை எனலாம்.
அவ்வப்போது ஏதேனும் ஒரு தொற்றுநோய் வெடித்துக் கிளம்பி மனித சமுதாயத்தை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது.
அவ்வகையில், பயங்கரமாக பரவக்கூடிய வைரஸ் தொற்று ஒன்று தொடர்பில் 57 நாடுகளுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
57 நாடுகளுக்கு அவசர எச்சரிக்கை
அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையமான CDC என்னும் அமைப்பு, பயங்கரமாக பரவக்கூடிய மண்ணன், தட்டம்மை அல்லது மணல்வாரி (measles) என்னும் வைரஸ் தொற்று தொடர்பில் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, 57 நாடுகளுக்கு பயணிப்பது தொடர்பில், பயண சுகாதார அறிவிப்பு (The Travel Health Notice- THN) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரமாக பரவக்கூடிய வைரஸ் தொற்றுக்களால் ஏற்படும் சர்வதேச சுகாதார அச்சுறுத்தல்கள், இயற்கை பேரழிவுகள் போன்ற விடயங்கள் குறித்து பொதுமக்களை எச்சரிக்க அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தால் பயண சுகாதார அறிவிப்புகள் வழங்கப்படுகின்றன.
தொற்றுகள் மற்றும் பிற சுகாதார ஆபத்துகளிலிருந்து மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து பயணிகளுக்கு வழிகாட்டுதலை வழங்குவதே நோய் கட்டுப்பாட்டு மையத்தின் நோக்கமாகும்.
உலகில் தட்டம்மை நோய் பரவியுள்ளதாக அறிவிக்கப்பட்ட நாடுகள்
தட்டம்மை தொடர்ந்து உலகளாவிய அச்சுறுத்தலாகவே உள்ளது என்று நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கிறது.
பிரித்தானியா உட்பட மொத்தம் 57 நாடுகளில் தற்போது அதிக அளவில் தட்டம்மை பரவல் காணப்படுவதாக நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கிறது.
அதிக அளவில் தட்டம்மை பரவல் காணப்படும் 57 நாடுகளின் பட்டியல்
- ஆப்கானிஸ்தான்
- அர்மீனியா
- ஆஸ்திரியா
- அஜர்பைஜான்
- பெலாரஸ்
- பெல்ஜியம்
- பெனின்
- போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா
- புர்கினா பாசோ
- புருண்டி
- கேமரூன்
- மத்திய ஆப்பிரிக்க குடியரசு
- சாட்
- ஐவரி கோஸ்ட்
- காங்கோ ஜனநாயக குடியரசு
- ஜிபூட்டி
- எக்குவடோரியல் கினியா
- எத்தியோப்பியா
- ஜார்ஜியா
- கானா
- கினியா
- கினியா-பிசாவ்
- இந்தோனேசியா
- ஈராக்
- அயர்லாந்து
- கஜகஸ்தான்
- கென்யா
- கிர்கிஸ்தான்
- லைபீரியா
- லிபியா
- மலேசியா
- மௌரிடானியா
- மால்டோவா
- மொனாக்கோ
- மான்டெனேக்ரோ
- மொசாம்பிக்
- நைஜர்
- நைஜீரியா
- பாகிஸ்தான்
- பிலிப்பைன்ஸ்
- காங்கோ குடியரசு
- ருமேனியா
- ரஷ்யா
- சான் மரினோ
- சவுதி அரேபியா
- செனகல்
- செர்பியா
- சோமாலியா
- தெற்கு சூடான்
- இலங்கை
- தாய்லாந்து
- டோகோ
- துருக்கி
- ஐக்கிய அரபு அமீரகம்
- பிரித்தானியா
- உஸ்பெகிஸ்தான் மற்றும்
- ஏமன்
யாருக்கு பாதிப்பு அபாயம் அதிகம்?
வெளிநாட்டுப் பயணம் செய்யும் திட்டம் வைத்துள்ளவர்களில், பயணிப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு முன் முழுமையாக தட்டம்மைக்கான தடுப்பூசி பெறாதவர்கள்.
இதுவரை ஒருமுறை கூட தட்டம்மைத் தொற்றுக்கு ஆளாகாதவர்கள் ஆகியோருக்கு அதிக பாதிப்பு அபாயம் உள்ளதாக நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கிறது.
ஆகவே, பயணம் செய்வோர், சர்வதேச பயண விதிகள் மற்றும் தட்டம்மை தடுப்பூசி பரிந்துரைக்கேற்ப முழுமையாக measles-mumps-rubella (MMR) தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும் என நோய் கட்டுப்பாட்டு மையம் பரிந்துரைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |