இந்தியாவில் தான் இப்படிலாம் நடக்கும்., ஓடும் ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் கூலாக படுத்திருந்த பெண்!
இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் ஓடும் ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் படுத்திருந்த பெண் எழுந்து கூலாக செல்போனில் பேசிக்கொண்டே எழுந்து நிற்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
இந்த அதிர்ச்சியூட்டும் விடீயோவை ஐபிஎஸ் அதிகாரி தீபன்ஷு காப்ரா (Dipanshu Kabra) தனது ட்விட்டர் பக்கத்தில் ஏப்ரல் 12-ஆம் திகதி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவுக்கு "போனில் கதை பேசுவது தான் ரொம்ப முக்கியம்" என்று அவர் தலைப்பிட்டுள்ளார்.
ட்விட்டரில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ள இந்த வீடியோவில், ஒரு சரக்கு ரயில் ஒன்று கடந்து செல்கிறது. ரயில் கடந்த பிறகு துப்பட்டாவால் முகத்தை மறைத்திருக்கும் ஒரு இளம்பெண், அடியில் தண்டவாளத்தின் மீது படுத்து கிடைத்துள்ளார்.
ரயில் சென்றதும் அவர் சர்வசாதாரணமாக எழுந்து சுற்றியிருக்கும் எதையும் பார்க்காமல் தண்டவாளத்தில் அமர்ந்தபடியே செல்போனில் அழைப்பை எடுத்து பேசுகிறார்.
பின்னர் அவள் சாதாரணமாக எதுவும் நடக்காதது போல் பாதையில் இருந்து இறங்கி ஸ்டேஷனுக்கு செல்கிறார். இந்த வீடியோ ட்விட்டர் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
फ़ोन पर gossip, ज़्यादा ज़रूरी है ??♂️ pic.twitter.com/H4ejmzyVak
— Dipanshu Kabra (@ipskabra) April 12, 2022
அதிர்ஷ்டவசமாக இந்த சரக்கு ரயிலில் தொங்கும் பாகங்கள் எதுவும் இல்லை, இல்லையெனில் அப்பெண்ணை முழுமையாக பார்த்திருக்க முடியாது என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார்.
இன்னொரு பயனர், அவரது துணிச்சலுக்கு விருதாக கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
சில பயனர்கள் அந்தப் பெண்ணைக் கைது செய்யக் கோரி பிரதமர் அலுவலகத்தை டெக் செய்துள்ளனர்.