விராட் கோலியின் ரூ.1000 கோடி சொத்துமதிப்பு - எப்படியெல்லாம் வருமானம் வருகிறது?
விராட் கோலியின் ரூ.1000 கோடி சொத்துமதிப்பில் அவரின் கிரிக்கெட் ஊதியம், விளம்பர ஒப்பந்தம், தொழில் முதலீடுகள் குறித்து பார்க்கலாம்.
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான விராட் கோலி, T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்ட நிலையில், ஒருநாள் போட்டி, முதல்தர கிரிக்கெட், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

Credit: Alex Davidson—ICC/Getty Images
37 வயதான விராட் கோலி, சுமார் ரூ.1050 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்கார மற்றும் மதிப்புமிக்க விளையாட்டு வீரர்களில் ஒருவராக உள்ளார்.
கோலியின் வருமானம் கிரிக்கெட்டில் இருந்து மட்டுமல்லாது, விளம்பர ஒப்பந்தம், தொழில் முதலீடு என பலவழிகளில் இருந்து கிடைக்கிறது.
கிரிக்கெட் ஊதியம்
பிசிசிஐயின் A+ ஒப்பந்தத்தில் உள்ள விராட் கோலி ஆண்டு ஊதியமாக ரூ.7 கோடி பெற்று வருகிறார்.
கூடுதலாக, ஒரு ODI போட்டிக்கு ரூ.6 லட்சமும், டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், T20 போட்டிக்கு ரூ.3 லட்சமும் ஊதியமாக பெற்றுள்ளார்.

Credit : X.com/ipl
மேலும், ஐபிஎல் தொடரில் RCB அணி அவரை ரூ.21 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
முதலீடு மற்றும் சொந்த நிறுவனங்கள்
இது மட்டுமல்லாது MRF, PUMA உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பிராண்டுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

Credit: Crictoday.com
இதில், MRF நிறுவனத்துடன் 8 ஆண்டுகளுக்கு ரூ.100 கோடியிலும், பூமா நிறுவனத்துடன் ரூ.110 கோடியில் செய்யப்பட்ட ஒப்பந்தமும் அடங்கும்.
மேலும், WROGN என்ற ஃபேஷன் பிராண்ட், One8 Commune என்ற உணவகங்களின் சங்கிலி, WROGN, Sports Convo team blue rising என்ற ரேஸிங் போட் அணி போன்றவற்றின் உரிமையாளராக உள்ளார்.

Blue Tribe, Rage Coffee, Hyperice, Chisel Gym போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.

Credit: IANS
FC Goa என்ற கால்பந்து அணி, UAE Royals என்ற டென்னிஸ் அணி, Bengaluru Yodhas என்ற மல்யுத்த அணி ஆகியவற்றின் இணை உரிமையாளராக உள்ளார்.
கார் மற்றும் வீடுகள்
மேலும், ரூ.2.72 கோடி மதிப்பில் ஆடி R8 V10 பிளஸ் கார், ரூ.2.97 கோடியில் ஆடி R8 LMX, ரூ.1.51 கோடியில் ஆடி A8 L, ரூ. 4.04 கோடியில் பென்ட்லி கான்டினென்டல் GT என பல்வேறு விலை உயர்ந்த கார்கள் விராட் கோலியிடம் உள்ளன.

மேலும், குர்கானில் 500 சதுர யார்ட்ஸ் பரப்பளவில், ரூ.80 கோடி மதிப்பளவில் ஒரு பங்களாவும், மும்பையின் வொர்லி பகுதியில் அமைந்துள்ள 'ஓம் காரா 1973' கட்டிடத்தின் 35-வது மாடியில், கடல் காட்சி கொண்ட ரூ.34 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பும், மும்பைக்கு அருகே அலிபாக்கில், 10,000 சதுரடி பரப்பில் ரூ.32 கோடி மதிப்பிலான சொகுசு விடுமுறை இல்லமும் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |