17 ஆண்டுகளை நிறைவு செய்த கோஹ்லி! இந்திய கிரிக்கெட்டின் இதயத்துடிப்பாக மாறியது எப்படி?
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோஹ்லி சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து பார்ப்போம்.
விராட் கோஹ்லியின் பயணம்
2008ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லி தனது பயணத்தைத் தொடங்கினார்.
அப்போது முதல் துடுப்பாட்ட வீரராக கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறிய கோஹ்லி, இந்திய கிரிக்கெட் அணியின் 'ரன் மெஷின்' என்று கூறும் அளவிற்கு வேகமாக ஓட்டங்களை குவித்தார்.
முதல் இன்னிங்ஸை விட சேஸிங்கில் கோஹ்லின் ஆட்டம் உக்கிரமாக இருக்கும். அதற்கு சான்றாக அவர் விளாசிய சதங்கள், அரைசதங்கள் உள்ளன.
இதன்மூலம் அதிவேகமாக 8,000 ஓட்டங்கள் மைல்கல் முதல் 14,000 ஓட்டங்கள் மைல்கல் வரை (ஒருநாள் போட்டியில்) எட்டி சாதனைகளை முறியடித்தார்.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 9000 ஓட்டங்களை கடந்து 46.85 சராசரியை வைத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 254 ஆகும்.
சதங்கள்
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆடுகளங்களில் கோஹ்லி சதங்கள் விளாசியது குறிப்பிடத்தக்க சாதனையாக உள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் முக்கிய வீரர் ஓட்டங்கள் எடுத்ததை விட, எந்த அணிகளுக்கு எதிராக எந்த சூழ்நிலைகளில் கோஹ்லி ஓட்டங்கள் எடுத்தார் என்பதே ரசிகர்களுடன் உணர்ச்சிப்பூர்வமாக அவர் இணைய காரணமாக அமைந்தன.
குறிப்பாக பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
2012ஆம் ஆண்டில் நடந்த ஆசியக் கிண்ணத் தொடரில் அவர் விளாசிய 183 ஓட்டங்களை கூறலாம்.
கேப்டனாக ஜொலித்த கோஹ்லி
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2018-19 டெஸ்ட் தொடரில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
இதன்மூலம் தன்னை ஒரு சிறந்த கேப்டன் என கோஹ்லி நிரூபித்துக் காட்டினார். ஏனெனில், பல ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி, டெஸ்ட் தொடரை இந்திய அணியால் வெல்ல முடியாமல் இருந்ததுதான்.
உத்வேகம்
கோஹ்லி 17 ஆண்டுகளாக அதே புத்துணர்ச்சியுடன் களத்தில் செயல்படுகிறார். ஆரம்பம் முதலே அவர் ஆர்வத்துடன் துடுப்பாட்டம் செய்கிறார். அவரது உடற்பயிற்சி தரநிலைகள் ஒப்பிட முடியாதவை ஆகும்.
கோஹ்லின் ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்பு கிரிக்கெட் வீரர்கள், ரசிர்கர்கள் என பலரையும் ஊக்குவிக்கிறது. இதுவே 17 ஆண்டுகள் கடந்து அவரது பயணம் நிற்காமல் செல்வதற்கு ஆட்டத்தையும் தாண்டி முக்கிய காரணமாக உள்ளது.
தற்போது 36 வயதாகும் கோஹ்லி, தனது மன உறுதி மற்றும் ஆர்வம் மூலம் தொடர்ந்து ஊக்கமளிக்கிறார்.
17 ஆண்டுகள்
U19 உலகக்கிண்ணத்தை வென்றது முதல் 25,000க்கும் மேற்பட்ட சர்வதேச ஓட்டங்களைக் குவித்து 17 ஆண்டுகளாக அவர் ஒரு சகாப்தமாக திகழ்கிறார்.
விராட் கோஹ்லி 302 ஒருநாள் போட்டிகளில் 14,181 ஓட்டங்களும், 125 டி20 போட்டிகளில் 4,188 ஓட்டங்களும் குவித்துள்ளார்.
அதேபோல் 123 போட்டிகளில் 9,230 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
டெஸ்ட், ஒருநாள், டி20 என விராட் கோஹ்லி 82 சர்வதேச சதங்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |