கோலியின் சொத்து மதிப்புகள் மட்டும் எவ்வளவுவென்று தெரியுமா?
இந்தியா அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலியின் சொத்து மதிப்பு குறித்து இங்கு காண்போம்.
ஜாம்பவான் கோலி
கிரிக்கெட் உலகில் பல சாதனைகள் புரிந்து ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருவதன் மூலமும் எண்ணற்ற ரசிகர்களை விராட் கோலி கொண்டிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு, விராட் கோலியின் நிகர மதிப்பு பற்றி ஒரு அறிக்கை வெளியானது. மே 29 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கோலியின் சொத்து மதிப்பு ரூ.1050 கோடி என தெரிய வந்தது.
Getty Images
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் 252 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட கோலி சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளார்.
சொத்து மதிப்பு
ஸ்டாக் குரோவின் படி, கோலியின் நிகர மதிப்பு ரூ.1,050 கோடி ஆகும். 34 வயதான கோலி தனது ‘ஏ+’ டீம் இந்தியா ஒப்பந்தத்தின் மூலம் ரூ.7 கோடி சம்பாதிக்கிறார்.
ஒவ்வொரு டெஸ்டிலும் போட்டிக் கட்டணமாக ரூ.15 லட்சம் சம்பாதிக்கிறார். ஒருநாள் போட்டியில் அவரது ஒரு போட்டிக்கான கட்டணம் ரூ.6 லட்சமும், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சமும் ஆகும்.
ஆர்சிபி அணிக்காக கோலி ஆண்டுக்கு ரூ.15 கோடி சம்பாதிக்கிறார். கிரிக்கெட் தவிர ப்ளூ ட்ரைப், யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ்பிஸ், எம்பிஎல் மற்றும் ஸ்போர்ட்ஸ் கான்வோ உள்ளிட்ட பல ஸ்டார்ட்-அப்களில் கோலி முதலீடு செய்துள்ளார்.
இதைத் தவிர்த்து, சுமார் 18 பிராண்டுகளுக்கு விளம்பரதாரராகவும் அவர் இருக்கிறார். இதன்மூலம் ஒரு நாள் விளம்பரத்திற்கு, 7.50 கோடி முதல் 10 கோடி வரை விராட் கோலி சம்பளமாக பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோலிக்கு மும்பை மற்றும் குர்கானில் வீடுகள் உள்ளது. அவரது மும்பை வீட்டின் மதிப்பு சுமார் 34 கோடி மற்றும் குர்கான் வீட்டின் மதிப்பு சுமார் 80 கோடி ஆகும். மேலும், கோலி பல ஆடை பிராண்டுகள் மற்றும் உணவகங்களின் உரிமையாளராகவும் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |