எந்த இந்தியரும் படைக்காத சாதனையை செய்த கோஹ்லி! அதிர வைத்த ஆட்டம்
டி20 கிரிக்கெட்டில் 14,000 ஓட்டங்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோஹ்லி படைத்தார்.
விராட் கோஹ்லி சாதனை
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோஹ்லி சதம் விளாசினார்.
60 பந்துகளை எதிர்கொண்ட அவர், 3 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 105 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் 14,000 ஓட்டங்களை கடந்தார். இந்த மைல்கல்லை எட்டிய ஆறாவது வீரர் விராட் கோஹ்லி ஆவார்.
முதல் இந்திய வீரர்
அதே சமயம் டி20யில் 14,000 ஓட்டங்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் கொண்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் (423 இன்னிங்ஸ்களில்) இந்தப் பட்டியலில் அதிக ஓட்டங்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
ஆனால், அவரை விட விரைவாகவே அதாவது 409 இன்னிங்ஸ்களிலேயே விராட் கோஹ்லி 14,000 ஓட்டங்களை எட்டிவிட்டார்.
டி20 கிரிக்கெட்டில் 14000 ஓட்டங்கள் குவித்தவர்கள்
- கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்)
- கிரோன் பொல்லார்ட் (மேற்கிந்திய தீவுகள்)
- அலெக்ஸ் ஹால்ஸ் (இங்கிலாந்து)
- டேவிட் வார்னர் (அவுஸ்திரேலியா)
- ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து)
- விராட் கோஹ்லி (இந்தியா)

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |