விராட் கோஹ்லி எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் இவர்தானாம்..அவரே கூறிய காரணம்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோஹ்லி தான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் குறித்து பேசியுள்ளார்.
விராட் கோஹ்லி
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற 22ஆம் திகதி தொடங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கு தயாராகி வரும் RCB வீரர் விராட் கோஹ்லியிடம், "நீங்கள் உங்கள் கெரியரில் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்?" என கேள்வி கேட்கப்பட்டது.
கடினமான பந்துவீச்சாளர்
அதற்கு பதிலளித்த விராட் கோஹ்லி (Virat Kohli), "இன்று சந்தேகமே இல்லை, உலகின் சிறந்த பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராதான். எல்லா வடிவங்களிலும் சிறந்த வீரரான அவர், சில முறை ஐபிஎல்லில் என்னை வெளியேற்றியுள்ளார்.
ஐபிஎல்லில் அவருக்கு எதிராக நான் வெற்றி பெற்றுள்ளேன், நான் அவரை எதிர்கொள்ளும்போது பரவாயில்லை, அது வேடிக்கையாக இருக்கும்.
வலைப்பயிற்சிகளில் அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதே ஒரு போட்டியை விளையாடுவது போன்றது. அதுவும் ஐபிஎல்லில் ஒரு போட்டியை விளையாடுவது போன்றது.
அவரது ஒவ்வொரு பந்திலும் ஓட்டங்கள் எடுக்க முற்படும்போதும், நானும் அவரும் போட்டியின் தீவிரத்தில் இருப்பதை நீங்கள் உணரலாம்.
இன்று நான் வலைப்பயிற்சிகளில் தொடர்ந்து விளையாடும்போது, அவர்தான் நான் வைத்திருக்கும் மார்க்கர், அது மிகவும் சுவாரஸ்யமான மற்றும் கடினமான சவால்" என்றார்.
பும்ராவின் பந்துவீச்சில் விராட் கோஹ்லி 140 ஓட்டங்களை 147.4 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். அதேபோல் கோஹ்லியை 5 முறை ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) அவுட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |