Chatgpt ஆலோசனையால் ரூ.1.32 கோடி லொட்டரி வென்ற பெண்
Chatgpt ஆலோசனையை பின்பற்றி பெண் ஒருவர் ரூ.1.32 கோடி லொட்டரி வென்றுள்ளார்.
சேட்ஜிபிடி போன்ற ஏஐ சாட்பாட்களின் பயன்பாடு மக்களிடையே வெகுவாக அதிகரித்து வருகிறது. சேட்ஜிபிடி ஆலோசனையை பின்பற்றி, கடனை அடைத்தது, உடல் எடை குறைத்தது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.
சேட்ஜிபிடியால் 1.32 கோடி லொட்டரி
அதேபோல், சேட்ஜிபிடி கூறிய எண்ணில் லொட்டேரி வாங்கி பெண் ஒருவர் ரூ.1.32 கோடி பரிசு வென்றுள்ளார்.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தை சேர்ந்த Carrie Edwards என்ற பெண், கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதி, பவர்பால் லொட்டரியில் எந்த எண்களை தேர்ந்தெடுக்க என சேட்ஜிபிடியிடம் கேட்டுள்ளார்.
சேட்ஜிபிடி வழங்கிய முதல் 5 எண்களில் 4 எண்கள் அவருக்கு பவர்பாலில் பொருந்தியுள்ளது. இதன் மூலம் அவர் 50,000 டொலர் பரிசு வெல்ல முடிந்தது.
மேலும், அவர் 1 டொலர் பவர்ப்ளே அம்சத்தை தேர்வு செய்ததால், இந்த பரிசு தொகை 3 மடங்காக அதிகரித்தது.
இதன் மூலம், 1,50,000 டொலர்(இந்திய மதிப்பில் ரூ.1.32 கோடி) வெற்றி பெற்றுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "முதலில் லொட்டரி வென்றதாக எனது போனில் நோட்டிபிகேஷன் வந்தபோது, அதை மோசடி என நினைத்தேன். நான் வெற்றிபெறவில்லை என நினைத்தேன்.
அதன் பின்னர் தான் சேட்ஜிபிடி தேர்வு செய்த எண்கள் மூலம் லொட்டரி வென்றுள்ளேன் என தெரியவந்தது. நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
3 அமைப்புகளுக்கு நன்கொடை
அதேவேளையில், 3 காரணங்களுக்காக அந்த லொட்டரி பரிசு பிரித்து வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் அவரது கணவரின் உயிரைப் பறித்த ஒரு நோயைப் பற்றிய ஆராய்ச்சியை ஆதரிக்கும் அமைப்பான AFTD என்ற தொண்டு நிறுவனத்துக்கு 50,000 டொலர் வழங்க உள்ளார்.
Shalom Farms என்ற உணவுப் பாதுகாப்பின்மைக்கான சமூகத்தால் இயக்கப்படும் தீர்வுகளில் கவனம் செலுத்தும் பண்ணைக்கு 50,000 டொலர் வழங்க உள்ளார்.
போர் விமானியான அவரது தந்தை, தனது வாழ்நாள் முழுவதும் ஆதரித்து வந்த Navy-Marine Corps அமைப்புக்கு 50,000 டொலர் வழங்க உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |