அம்மாவுக்காக வெளிநாட்டிலிருந்து ஓட்டு கேட்கும் ராதிகாவின் மகன்.., என்ன பேசினார் தெரியுமா?
விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகாவின் மகன், அவருக்காக வெளிநாட்டில் இருந்து வாக்கு கேட்டுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சரத்குமார் மற்றும் அவரது மனைவி வேட்பாளர் ராதிகா இருவரும், விருதுநகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க ராதிகாவின் மகன் ராகுல் சரத்குமார் வெளிநாட்டில் படித்து வரும் நிலையில், அங்கிருந்து அம்மாவுக்காக வீடியோ மூலம் ஓட்டு கேட்டுள்ளார்.
அவர் பேசியது
அவர் அந்த வீடியோவில், "வணக்கம். நான் ராகுல் சரத்குமார். என்னுடைய அம்மா ராதிகா சரத்குமார் விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவர் ஒரு திறமைசாலி, சூப்பர் பெண்மணி.
அவர் மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அதை நேர்மையாக செய்ய வேண்டும் என்று நினைப்பார். நான் விருதுநகர் தொகுதிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், கல்லூரி தேர்வு இருந்ததால் வரமுடியவில்லை.
அம்மா மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நீங்களும் அம்மாவின் மீதும், தாமரை சின்னத்தின் மீதும் நம்பிக்கை வைத்து ஓட்டு போட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |