MLAவின் மாத சம்பளம் 2 லட்சம் தான், எப்படி ஓட்டுக்கு இவ்வளவு பணம்? நடிகர் விஷால் கேள்வி
நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதியாக மாறுவோம் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
விஷால்
சமீபத்தில் அரசியலுக்கு வருவேன் என்று கூறிய நடிகர் விஷால், தற்போது ரத்னம் படத்தினை விளம்பரப்படுத்த பல ஊர்களுக்கு பயணித்து வருகிறார்.
அந்த வகையில் திருச்சியில் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
''சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. நடிகர் விஜய் மட்டுமல்ல; யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல.
வேண்டிக் கொள்ளுங்கள்
நான் அரசியலுக்கு வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால், நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதியாக மாறுவோம்.
ஓட்டுக்கு கொடுத்த பணம் மக்களுடைய பணம் தான். ஒரு MLAவுக்கு மாத சம்பளம் வெறும் இரண்டு லட்சம் ரூபாய் என இருக்கும்போது, அவர்களால் எப்படி ஓட்டுக்கு இவ்வளவு பணம் கொடுக்க முடிகிறது?'' என கேள்வி எழுப்பினார்.
அத்துடன் நடிகர் சங்க கட்டிடம் குறித்து விஷால் பேசும்போது, 'இந்த ஆண்டு இறுதிக்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்ற விஷால், நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து நடிகர் சங்கங்களில் உள்ள பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் பொதுக்கூட்டத்தில் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்' என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |