100 ஹமாஸ் தலைவர்களின் தலைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்: அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி ஆவேசம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் வேட்பாளரான விவேக் ராமசாமி, காஸா எல்லையில் 100 ஹமாஸ் தலைவர்களின் தலைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
காஸா பகுதியில் இருந்து ஹமாஸை அகற்ற இஸ்ரேல் தனது முழு பலத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று விவேக் ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.
அக்டோபர் 7-ம் திகதி நடந்த தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பின் உயர்மட்ட தலைவர்கள் 100 பேரின் தலைகளை காசா எல்லையில் மேடையில் வரிசைப்படுத்தி காட்சிப்படுத்த வேண்டும் என்றும் விவேக் கூறினார்.
குடியரசுக் கட்சியின் யூத மாநாட்டில் ராமசாமி தனது உரையில், பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு முழு உரிமை உள்ளது என்று கூறினார்.
மேலும், 1948ல் இருந்து 22 நாடுகளில் இருந்து விரட்டப்பட்ட யூத மக்களை யூதர்கள் அரவணைத்தது போல் பாலஸ்தீனியர்களை அரபு நாடுகள் அரவணைக்க தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |