வைரமுத்து உடன் வி ஜே அர்ச்சனாவின் புகைப்படம்: "கவனமாக இருங்கள்" எச்சரித்த சின்மயி!
தமிழ் சின்னத்திரை நடிகையான அர்ச்சனா சமீபத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்த நிலையில், அதில் பாடகி சின்மயி கவனமாக இருங்கள் என்று கமெண்ட் செய்து இருப்பது வைரல் ஆகி வருகிறது.
பாடகி சின்மயி எச்சரிக்கை
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் நாடகங்களில் நடித்து வரும் அர்ச்சனா, அவ்வப்போது சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அர்ச்சனா தமிழில் புகழ்பெற்ற பாடலாசிரியர் வைரமுத்துவை சந்தித்துள்ளார், அத்துடன் அது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார்.
இதற்கு ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து இருந்த நிலையில், பாடலாசிரியர் வைரமுத்து மீது முன்பு பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு தெரிவித்த இருந்த பாடகி சின்மயி-யும் அர்ச்சனாவின் பதிவிற்கு கமெண்ட் செய்து இருந்தார்.
பாடலாசிரியர் வைரமுத்து அர்ச்சனாவை ஆசிர்வதிப்பது போல் இருக்கும் புகைப்படங்களை குறிப்பிட்டு, "இது போல் தான் அனைத்தும் தொடங்கும், தயவு செய்து கவனமாக இருங்கள், அவரை சந்திக்க செல்லும் போது யாரையேனும் உடன் துணைக்கு அழைத்து செல்லுங்கள், மேலும் அவரிடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள்" என கமெண்ட் செய்துள்ளார்.
VJ Archana- Poet Vairamuthu
பாடகி சின்மயி-யின் இந்த கருத்தை உடனடியாக பதிவில் இருந்து அர்ச்சனா நீக்கி இருந்தாலும், அதற்குள் சில இணையவாசிகள் அதை ஸ்கீரின்சாட் எடுத்து வைரல் செய்து வருகின்றனர்.
பாடகி சின்மயி-யின் குற்றச்சாட்டு
கடந்த 2018ம் ஆண்டு பத்திரிக்கையாளர் ஒருவர், பெயர் வெளியிடாத பெண்ணை பாலியல் பாடலாசிரியர் வைரமுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவருடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.
அப்போது பத்திரிக்கையாளரின் செயலுக்கு ஆதரவு தெரிவித்த சின்மயி, தன்னையும் கவிஞர் வைரமுத்து பாலியல் சீண்டல் செய்ய முயற்சித்ததாக பகிரங்க குற்றச்சாட்டை வெளியிட்டார்.
Chinmayi Sripaada
இதையடுத்து தமிழகத்தில் மீ டூ Me Too) இயக்கம் தலைதூக்கி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.