ஆறு ஆண்டுகளாக ஜனாதிபதியாக Putin வாங்கிய சம்பளம் எவ்வளவு? புடினின் வருமான விவரம் இதோ
ரஷ்யாவின் ஜனாதிபதியாக கடந்த ஆறு ஆண்டுகளில் புடின் வெறும் 7 லட்சம் அமெரிக்க டொலர்களை மட்டுமே சம்பாதித்துள்ளதாக கூறியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வருமான விவரம் வெளியாகியுள்ளது. இதற்கான விவரங்களை ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில், புடின் சுமார் 67.6 million rubles ($753,000) வருமானம் ஈட்டியுள்ளார் என்று ரஷ்ய தேர்தல் ஆணையம் (Central Election Commission) தெரிவித்துள்ளது.
அதாவது, இலங்கையின் ரூபாய் மதிப்பில் ரூ.23.75 கோடி மட்டுமே புடின் சம்பாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் 2018 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்த வருமானத்தைப் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் புடின் போட்டியிடுகிறார். தேர்தலுக்குத் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் புடினின் வருமான விவரங்கள் இருந்தன.
புடின் கடந்த ஆறு ஆண்டுகளாக சம்பளம், பத்திரங்கள், வங்கி வைப்புத்தொகை, இராணுவம் மற்றும் சிவில் ஓய்வூதியம் மூலம் தனது வருமானத்தை ஈட்டியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொத்து விற்பனை மூலம் கிடைக்கும் வருமானமும் இதில் அடங்கும். புதினின் பெயரில் சில சொத்துக்கள் உள்ளன. அவருக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 77 சதுர மீட்டர் apartment மற்றும் 18 சதுர மீட்டர் garage உள்ளது.
மாஸ்கோவில் 153.7 சதுர மீட்டர் கட்டிடம் உள்ளது. இவை அரசிடம் குத்தகைக்கு விடப்பட்டது. மேலும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அவருக்கு வாகன நிறுத்துமிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணத்தின்படி, புடினிடம் இரண்டு GAZ M-21 கார்கள் உள்ளன. அந்த கார்கள் 1960 மற்றும் 1965இல் தயாரிக்கப்பட்டவை. 1987 campaign car மற்றும் 2009இல் வாங்கிய Lada Niv காரும் உள்ளது.
புடின் தனது சேமிப்பு விவரங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார். சுமார் பத்து வங்கிக் கணக்குகளில் ஆறு லட்சம் டொலர்களை வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், St Petersburg Bankல் 230 பங்குகள் உள்ளன. ஒவ்வொரு பங்கின் மதிப்பு 280 ரூபிள் ஆகும்.
ஜனாதிபதி தேர்தல் மார்ச் 15 முதல் 17 வரை நடைபெறும். தேர்தலில் ஐந்தாவது முறையாக புதின் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Vladimir Putin salary for last 6 Years As Russia's President, Vladimir Putin salary, Vladimir Putin Net Worth, Russian President salary, Russian President election