விளாடிமிர் புடின் திடீரென்று இறந்தால்! ரஷ்யாவில் அடுத்து என்ன நடக்கும்? நிபுணர்கள் வெளிப்படை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அரசியல் வாரிசு யார் என இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், திடீரென்று புடின் இறக்க நேர்ந்தால், உடனடியாக ரஷ்ய பிரதமரே அதிகாரத்திற்கு வருவார் என நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உடல் நிலை தொடர்பில் தொடர்ந்து பல வதந்திகள் பரவிவருகிறது. மேலும், விளாடிமிர் புடின் புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு உட்பட இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
69 வயதான புடின் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறார். மேலும் எதிர்வரும் 2024 மற்றும் 2030 தேர்தல்களிலும் அவரே ஜனாதிபதியாக போட்டியிடுவார் என புதிய சட்டத்திருத்தம் ஒன்றையும் கடந்த ஆண்டு அவர் கொண்டுவந்துள்ளார்.
இதனால் ரஷ்ய ஜனாதிபதியாக 2036 ஆம் ஆண்டு வரையில் விளாடிமிர் புடினே பொறுப்பில் இருப்பார் எனவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், திடீரென்று விளாடிமிர் புடின் இறக்க நேர்ந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து நிபுணர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பொறுப்பில் இருக்கும் போது விளாடிமிர் புடின் இறக்க நேர்ந்தால், அடுத்து ரஷ்ய பிரதமராக பொறுப்பில் இருக்கும் Mikhail Mishustin அதிகாரத்திற்கு வருவார் எனவும்,
அடுத்த மூன்று மாதங்களில் தேர்தல் முன்னெடுக்கப்பட்டு புதிய ஜனாதிபதி தெரிவாகும் வரையில் பிரதமர் Mikhail Mishustin பொறுப்பில் இருப்பார். ஆனால், புடினுக்கு மிக விசுவாசியான பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு ஆட்சிக்கு வரலாம் எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும், ஊடக வெளிச்சத்திற்கு வராத ஒருவர், ரஷ்யாவின் ஜனாதிபதியாக பொறுப்புக்கு வரவும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், அவர் புடினை விடவும் கடும்போக்காக நடந்து கொள்ளவும் வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.