இடது கையை மட்டும் வீசி வித்தியாசமாக நடக்கும் புடின்! நோய் தான் காரணமா?
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வித்தியாசமாக நடப்பதற்கான காரணத்தை தெரிந்துகொள்வோம்.
ரஷ்ய ஜானாதிபதி விளாடிமிர் புடின் (69) நடப்பதை கவனித்துள்ளீர்களா..? அவர் நடக்கும்போது தனது வலது கையை பெரிதும் அசைக்காமல், இடது கையை மட்டும் வீசி வித்தியாசமாக நடப்பார். அவர் இப்படி நடப்பது குறித்து பலவிதமான கருத்துக்கள் உள்ளன.
கேஜிபி பயிற்சி
தகவல்களின்படி, புடினின் கால்கள் மற்றும் வலது கை விறைப்பாக இருக்கும் அதே சமயம் இடது கை பக்கவாட்டில் ஊசலாடும் புடினின் தனித்துவமான நடைபழக்கம், கேஜிபி (KGB-Komitet Gosudarstvennoy Bezopasnosti) பயிற்சியுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.
1975-ஆம் ஆண்டு சோவியத் கேஜிபியின் ஒரு பகுதியாக இருந்தபோது, சோவியத் யூனியன் உடைவதற்கு முன், லெப்டினன்ட் கர்னல் பதவிக்கு உயர்ந்த புடினின் நடைப்பயிற்சி, ஆயுதப் பயிற்சியுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
"கேஜிபி செயல்பாட்டாளர்கள் தங்கள் ஆயுதத்தை தங்கள் வலது கையில் மார்புக்கு அருகில் வைத்திருக்கவும், ஒரு பக்கமாக, பொதுவாக இடதுபுறமாக முன்னோக்கி நகர்த்தவும் அறிவுறுத்தப்பட்டனர், ஒரு எதிரியை எதிர்கொள்ளும் போது துப்பாக்கியை எவ்வளவு விரைவாக எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக தாக்குதலுக்கு அனுமதிக்கும்" என்று போர்ச்சுகல், இத்தாலி மற்றும் நெதர்லாந்தில் ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர்.
ஸ்டெராய்டு
அதேபோல் மற்றோரு கருத்தில், விளாடிமிர் புடின் ஸ்டெராய்டுகளை உட்கொள்கிறார் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர் ரஷ்ய தலைவர் ஸ்டெராய்டுகளை உட்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டார், இது அவரை மிகவும் ஆக்ரோஷமாக மாற்றியது என்றும் கூறப்படுகிறது. முன்னாள் வெளியுறவு செயலாளர் லார்ட் டேவிட் ஓவன் சமீபத்தில் புடினின் முகத்தில் ஒரு மாற்றம் இருப்பதாக சந்தேகிக்கிறார், இது தசையை அதிகரிக்கும் மருந்தாக பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டுகளை உட்கொண்டதன் காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
Did you ever notice the walking style of Russian President Vladimir Putin? The way he walks with his right arm held rigid, while his left arm swings freely. Here's the history behind his walk #NewsMo #Putin #VladimirPutin #Russia #Ukraine #RusiaUkraineWar pic.twitter.com/GLqDgacKRk
— IndiaToday (@IndiaToday) February 28, 2022
பார்க்கின்சன் (Parkinson) நோய்
அதேபோல், மற்றோரு கருத்தில் அவருக்கு பார்க்கின்சன் (Parkinson) எனும் நோய் இருப்பதாகவும், இதனால் அவரது காய் கால்கள் சரியாக இயங்காமல், அவரால் கட்டுப்படுத்த முடியாதபடி நடுக்கம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பில் சமீபத்தில் சில வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் அவரது நோய் மற்றும் அதற்காக அவர் பயன்படுத்தும் மருந்துகள் அவரை முழுமையாக ஆக்கிரமித்துள்ளதாகவும் கருத்துக்கள் இருக்கின்றன.