வெடித்து சிதறிய எரிமலை! 9 பேர் உயிரிழப்பு..விரிவுபடுத்தப்பட்ட அபாய மண்டலம்
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் 9 பேர் பலியாகினர்.
9 பேர் பலி
இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட தொடர் வெடிப்பைத் தொடர்ந்து, புளோரஸ் தீவில் வீடுகள் எரிந்தன.
இதில் சிக்கியவர்களில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
மேலும், திங்களன்று மவுண்ட் லெவோடோபி லகி லகியின் அபாய அளவை அதிகாரிகள் உயர்த்தி, அபாய மண்டலத்தை விரிவுபடுத்தினர்.
அடிக்கடி வெடிப்புகள்
திங்களன்று நள்ளிரவுக்குப் பிறகு அடிக்கடி வெடிப்புகள் ஏற்படுவதால், விலக்கு மண்டலத்தை 7 கிலோமீற்றர் சுற்றளவுக்கு எரிமலை ஆய்வு நிறுவனம் இரட்டிப்பாக்கியது.
அதேபோல், வெடிப்புக்கு பின்னர் 2,000 மீற்றர் உயரமுள்ள பழுப்பு நிற சாம்பல் காற்றில் பறந்தது மற்றும் சூடான சாம்பல் அருகில் உள்ள கிராமத்தைத் தாக்கியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |