ரூ. 2.10 லட்சம் வரை ஆஃபர்.., விநாயகர் சதுர்த்திக்காக பெரிய தள்ளுபடியை அறிவித்த கார் நிறுவனம்
விநாயகர் சதுர்த்திக்காக Volkswagen நிறுவனம் தனது இரண்டு கார்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இரண்டு கார்களுக்கு தள்ளுபடி
Volkswagen நிறுவனமானது விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் வகையில் மிகப்பெரிய சலுகையை அறிவித்துள்ளது. நிறுவனம் தன்னுடைய Virtus காருக்கு ரூ1.75 லட்சம் தள்ளுபடியும், Taigun காருக்க ரூ2.10 லட்சம் தள்ளுபடியையும் அறிவித்துள்ளது.
இந்த இரண்டு கார்களும் விற்பனையில் அமோகமாக சிறந்து விளங்குவதால் இதன் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Volkswagen Virtus காரில் 1.0 லிட்டர் TSI petrol engine மற்றும் 1.5 லிட்டர் TSI petrol engine ஆகிய இரு ஆப்ஷன் உள்ளது.
இதில் 1.0 லிட்டர் TSI petrol engine ஆனது 113 பிஎச்பி பவரையும, 178 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இதன் engine ஆனது 6-speed manual அல்லது torque converter gearbox உடன் இணைக்கப்பட்டுள்ளது.
அதேபோல 1.5 லிட்டர் TSI petrol engine ஆனது 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |