தேர்தல் வந்தால் தான் வர்றீங்க! எம்.பி ஜோதிமணியிடம் வாக்காளர் சரமாரி கேள்வி
தமிழகத்தில் உள்ள கரூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியிடம் வாக்காளர் ஒருவர் கேள்விகளை கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராம சபையில் ஜோதிமணி
இந்தியாவின் 77 ஆவது சுதந்திரதின விழாவை முன்னிட்டு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்தவகையில், தமிழக மாவட்டம் கரூர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூக்கணாங்குறிச்சி கந்தசாரப்பட்டி பகுதி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த கிராம சபை கூட்டத்தில் கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கலந்து கொண்டார்.
கேள்வி எழுப்பிய வாக்காளர்
அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட ஜோதிமணியிடம் வாக்காளர் ஒருவர்,"தேர்தல் வரும்போது மட்டும் தான் உங்களுக்கு ஞாபகம் வருமா? ஒட்டு கேட்பதற்கு மட்டும் வருகிறீர்கள். நன்றி சொல்வதற்கு கூட வரவில்லை" என்றார்.
இதற்கு பதில் பேசிய ஜோதிமணி,"நான் பல இடங்களுக்கு சென்று நன்றி கூறி கொண்டு தான் வருகிறேன். நீங்கள் வேண்டுமென்று வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல தெரிகிறது" என்றார்.
ஆனாலும், அந்த வாக்காளர் கேள்விகளை நிறுத்தாமல், போன் செய்தால் ஒரு முறையாவது எடுத்துள்ளீர்களா?, எம்.பி என்ற முறையில் நாங்கள் யாரிடம் முறையிடுவது என்ற கேள்வி கேட்டார். இதனால், கிராமசபையில் இருந்த பொதுமக்கள் மற்றும் பொலிசார் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்பு, வாக்காளரை சமாதானப்படுத்தி பொலிசார் அவரை அந்த இடத்திலிருந்து அழைத்துச் சென்றனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சரிங்க்கா...
— Ravichandran Aravakurichi (@RAravakurichi) August 17, 2023
நாடாளுமன்றம் போயி என்ன செஞ்சீங்க...❓#கரூர் #MP #ஜோதிமணி pic.twitter.com/juA4oS3l4x
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |