பாக்முட்டின் இரு மாவட்டங்களை கைப்பற்றிய வாக்னர் படை!
உக்ரேனில் இரண்டு மாவட்டங்களை வாக்னர் படை கைப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புடினின் பாராட்டு
மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான நாடுகளின் ஐக்கிய முன்னணியைக் காட்டும் உச்சி மாநாட்டிற்காக, கடந்த மாதம் மாஸ்கோவில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை ரஷ்ய ஜனாதிபதி புடின் வரவேற்றார்.
அதன் பின்னர், பசிபிக் பகுதியில் 'மிக உயர்ந்த அளவிலான' இராணுவ பயிற்சிகளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாராட்டினார்.
வாக்னர் படை கைப்பற்றிய மாவட்டங்கள்
இந்த நிலையில் உக்ரேனிய நகரமான பாக்முட்டின் மத்தியிலும், வடமேற்கிலும் உள்ள இரண்டு மாவட்டங்களை வாக்னர் படை கைப்பற்றியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ரஷ்யா அனைத்து உக்ரைன் பிரதேசத்தில் இருந்தும் வெளியேறும் வரை அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட மாட்டோம் என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில் உக்ரைன் தானியங்களுக்கு போலந்தும், ஹங்கேரியும் தடை விதித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.